சொந்த ஊருக்கு வந்த இளைஞர் வெட்டிக்கொலை - சிவகங்கையில் பரபரப்பு

sivagangai youthmurder
By Petchi Avudaiappan Feb 04, 2022 05:00 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

சிவகங்கை அருகே  சொந்த ஊருக்கு வந்த இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே அலியாதிருத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் என்பவர் கோவையில் உள்ள மதுபான விடுதியில் வேலை செய்து வருகிறார். 

இதனிடையே தனது சொந்த கிராமத்திற்கு திரும்பிய சண்முகம்  திறந்தவெளி சிறை எதிரே உள்ள அரசு மதுபானக் கடையில் மதுபானம் வாங்கிக்கொண்டு சொந்த ஊரான அறியாதிரும்பள் செல்லும்போது மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காளையார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சண்முகத்தின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.