15 நிமிஷம் தான்..தாமதமாக எழுப்பிய தந்தை - ஆத்திரத்தில் மகன் வெறிச்செயல்!

Attempted Murder Kerala Crime
By Sumathi Apr 09, 2023 10:10 AM GMT
Report

தாமதமாக எழுப்பியதாக கூறி ஆத்திரத்தில் மகன் தந்தையை அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாக்குவாதம்

கேரளா, கோடனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாய்(60). இவருக்கு ரீனா என்ற மனைவியும், அலீனா என்ற மகளும், 25 வயதில் ரிஜோ என்ற மகனும் உள்ளனர். ரிஜோ வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார்.

15 நிமிஷம் தான்..தாமதமாக எழுப்பிய தந்தை - ஆத்திரத்தில் மகன் வெறிச்செயல்! | Youth Murder Father For Not Wake Up On Time Kerala

சம்பவத்தன்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தன்னை 8.15 மணிக்கு எழுப்ப வேண்டும் என தந்தையிடம் கூறிவிட்டு படுத்து உறங்கியுள்ளார். ஆனால் தந்தை ஜோய் சிறிது தாமதாமாக இரவு 8.30 மணிக்கு மகனை எழுப்பிவிட்டுள்ளார்.

கொலை

இதனால் ஆத்திரமடைந்த மகன் ஏன் தாமதமாக எழுப்பினீர்கள் என கேட்டு தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் முற்றிய சண்டையில் தந்தையை அடித்து கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீஸார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மகனை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.