கோழியை துப்பாக்கியால் சுட்ட விவசாயி - இளைஞரின் உயிரைக் காவு வாங்கியது எப்படி?

Death Kallakurichi
By Sumathi Sep 27, 2025 07:57 AM GMT
Report

கோழியை துப்பாக்கியால் சுடும் போது குறி தவறியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோழிக்கு குறி

கள்ளக்குறிச்சி, மேல் மதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டி என்பவர் மகன் அண்ணாமலை. இவர், அவருடைய மருமகனுக்கு கோழிக் குழம்பு வைப்பதற்காக,

அண்ணாமலை

அவர் வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் அப்பகுதியில் சுற்றித்திரிந்த கோழியை சுட்டதாக கூறப்படுகிறது.

குழந்தைக்கு மது, சிகரெட் சூடு; வெந்நீரில் முக்கி எடுத்து சித்ரவதை - காதலனுடன் தாய் வெறிச்செயல்!

குழந்தைக்கு மது, சிகரெட் சூடு; வெந்நீரில் முக்கி எடுத்து சித்ரவதை - காதலனுடன் தாய் வெறிச்செயல்!

இளைஞர் பலி

ஆனால், பக்கத்து வீட்டில் இருந்த பிச்சையன் மகன் பிரகாஷ் தலை மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து பிரகாஷ் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

கோழியை துப்பாக்கியால் சுட்ட விவசாயி - இளைஞரின் உயிரைக் காவு வாங்கியது எப்படி? | Youth Kiled By Bullet Instead Chicken Kallakurichi

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், அண்ணாமலையை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.