யூடியூபர் மதனை காண வீட்டின் முன்பு குவிந்த இளைஞர்கள்
யூடியூப் தளத்தில் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் இன்று கைது செய்யப்பட்ட நிலையில் அவரை காண இளைஞர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆன்லைன் விளையாட்டு யூடியூப் சேனலில் ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டது தொடர்பான புகாரில் பப்ஜி மதனை காவல்துறையினர் இன்று தர்மபுரியில் கைது செய்தனர்.
இதனை அடுத்து விசாரணைக்காக மதன் தாதகாப்பட்டி பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்து வரப்படுவார் என்ற தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதனையடுத்து மதனை காண இளைஞர்கள் பலர் அப்பகுதியில் குவிந்தனர்.
பப்ஜி மதன் குறித்த தகவல்களும், அவரது மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்ட விவகாரமும் அவரின் வீடு அமைந்துள்ள சேலம் தாதகாப்பட்டி சீரங்கன் தெரு பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.