தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக ஆசிட் பாட்டிலை கொடுத்த கடைக்காரர் - அறியாமல் குடித்த இளைஞருக்கு நேரந்த விபரீதம்
கடையில் தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக ஆசிட் பாட்டிலை கொடுத்ததால் ஆசிட்டை குடித்த மாணவர் தீவிர் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த சைதன்யா என்ற இளைஞர் லயோலா கல்லூரியில் இளங்கலை படிப்பு படித்து வருகிறார்.
இவர் எனிக்கேப்படு பகுதியில் உள்ள ஒரு கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கியுள்ளார். ஆனால் கடைக்காரர் தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக ஆசிட் பாட்டிலை மாற்றி கொடுத்துள்ளார்.
இதை அறியாமல் தண்ணீர் தான் என நினைத்து ஆசிட்டை அந்த இளைஞர் மளமளவென குடித்துவிட்டார். பின்னரே அது தண்ணீர் இல்லை அமிலம் என தெரியவந்துள்ளது.
பின்பு இளைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் அருகே உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவரின் மருத்துவ செலவுக்கு கல்லூரி நிர்வாகம் நிதி திரட்டி வருகிறது.
மேலும் கடைக்காரரின் அலட்சியத்தாலே மாணவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என கூறி அப்பகுதி மக்கள் தங்களது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.