அண்ணி மேல் வந்த ஆசை..நண்பன் விடாமல் டார்ச்சர் - தடுத்த மச்சினனுக்கு நேர்ந்த கொடூரம்!
அண்ணியை டார்ச்சர் செய்த நண்பனை தட்டி கேட்ட இளைஞர் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளித்துள்ளது.
டார்ச்சர்
கர்நாடகா மாநிலம், கோலார் நகரை சேர்ந்தவர் ரோஹித்(22). இவரது நண்பர் அம்ஜத்(24). இவர்கள் ஒருவகையில் தூரத்து சொந்தம் எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அம்ஜத் அவ்வப்போது ரோஹித் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.
அப்போதுதான், ரோஹித்தின் அண்ணி மீது அம்ஜத்திற்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்போதுதான், ரோஹித்தின் அண்ணி மீது அம்ஜத் முன்பை விட அதிகமாக ரோஹித் வீட்டுக்கு வர தொடங்கினார். அம்ஜத் ரோஹித்துக்கு நண்பன் என்பதுடன் உறவினர் என்பதால், அவர்மீது குடும்பத்தினர் யாருக்கும் சந்தேகம் எழவில்லை.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அம்ஜத், ரோஹித்துக்கு தெரியாமல், அவரது அண்ணியின் செல்போன் நம்பரை எடுத்துக்கொண்டு, தினமும் போன் செய்து ஆபாசமாக பேசி வந்துள்ளார்.
நாளடைவில் இந்த பாலியல் தொல்லை அதிகரித்துக்கொண்டே இருந்த நிலையில், மெல்ல மெல்ல வீடியோ கால் செய்தும் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். தொடக்கத்தில் உறவுக்காரர்களிடம் தன்னால் எந்த பிரிவினையும் வந்துவிடக்கூடாதே என்று எண்ணிய அண்ணி அமைதிகாத்திருந்துள்ளார்.
ஆனால் எல்லைமீறிய டார்ச்சரை அம்ஜத் தரவும், ஒருகட்டத்தில் பொருமையை இழந்த அண்ணி இது குறித்து தன்னுடைய மைத்துனர் ரோஹித்திடம் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய மைத்துனர் ரோஹித்திடம் அம்ஜத்தை கண்டிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ரோஹித், தன்னுடைய உறவினர்களுடன், அம்ஜத் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். தன்னுடைய அண்ணிக்கு தொந்தரவு கொடுத்தால் சும்மா விடமாட்டேன் என்றும் எச்சரித்துள்ளார்.
கொடூரம்
ஆனால் அப்போதும் திருந்தாத அம்ஜத் மறுபடியும் அண்ணிக்கு போன், வீடியோ கால் செய்ய ஆரம்பித்தார். இதனால் மீண்டும் தகராறு வெடித்தது. இதனிடையே ரோஹித் வேலை விஷயமாக பெங்களூரு சென்றார். இந்த விஷயம் அம்ஜத்துக்கு தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த ரோஹித்துக்கு போன் செய்த அம்ஜத், தனியாக பேச வேண்டும் என்று சொல்லி தனியாக சந்திக்க ஜமால் நகர் அருகே அவரை அழைத்துள்ளார். ரோஹித் அங்கு வந்ததுமே மீண்டும் அண்ணி குறித்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால், ரோஹித்தின் மார்பில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்தவெள்ளத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துவிட்டார். ரோஹித்தின் சடலத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனே
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், ரோஹித்தின் உடலை மீட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, கொலையாளி அம்ஜத்தையும் கைது செய்தனர்.