ஓடும் ரயிலில் தீ பற்றி எரிந்த பெண்.. கொளுத்திவிட்டு ரசித்த பார்த்த இளைஞர் - பகீர் பின்னணி!
ரயிலில் பயணம் செய்த பெண்ணை இளைஞர் ஒருவர் லைட்டரால் தீ வைத்துக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நியூயார்க்
நியூயார்க்கின் புரூக்ளினில் நகரத்தில் , கோனி ஐலேண்ட்- ஸ்டில்வேல் அவென்யூ என்ற சுரங்கப்பாதை ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையில், இந்த நிலையத்திற்குக் காலை 7.30 மணியளவில் ரயில் ஒன்று வந்துள்ளது.
அந்த ரயிலில் கடைசி பெட்டியில் பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார்.அங்கு வந்த மர்மநபர் ஒருவர் அருகில் வந்து அமர்ந்துள்ளார். தொடர்ந்து சிறிது நேரம் பெண்ணை கவனித்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
அப்போது திடீரென தனது பாக்கெட்டிலிருந்து லைட்டரை எடுத்து அந்த பெண்ணின் ஆடையில் பற்ற வைத்துள்ளார்.தீ உடல் முழுவதும் வேகமாகப் பரவிப் பற்றி எரிந்த நிலையில், அந்த பெண் கதறியுள்ளார்.அந்த ரயில் அடுத்த நடைமேடையில் நிறுத்தப்பட்டது.
அதிர்ச்சி சம்பவம்
அப்போது அந்த இளைஞர் நடைமேடையில் சேரில் அமர்ந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்துள்ளார்.ஆனால் இதனைக் கண்ட பொதுமக்கள் அந்த பெண்ணை காப்பற்றாமல் தொலைப்பேசியில் படம் எடுத்துள்ளனர்.இதனையடுத்து அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இட்டத்திற்கு வந்த காவலர்கள் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்து தப்ப முயன்ற இளைஞரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம், விசாரணை நடைபெற்று வருகிறது.