சாகச யூடியூப்பர்களால் தடம் மாறும் 2kகிட்ஸ் ? உயிரை பறித்த பைக் சாகசம்

By Irumporai Dec 02, 2022 05:48 AM GMT
Report

சென்னையில் அதிவேகமாக பைக்கினை ஓட்டி சென்று விபத்துக்குள்ளாகி கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 அதிகரிக்கும் சாலை விபத்து

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பேர் சாலை விபத்துக்களில் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.5 லட்சம் பேர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இதற்கு முக்கிய காரணமே சாலைவிதிகளை வாகன ஓட்டிகள் கடைபிடிக்காமல் இருப்பதுதான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.குறிப்பாக தமிழகத்தில் இது போன்ற கொடூர மரணசம்பவங்களில் அதிகம் உயிரை விடுவது இளைஞர்கள்தான் என கூறப்படுகிறது. 

சாகச யூடியூப்பர்களால் தடம் மாறும் 2kகிட்ஸ் ? உயிரை பறித்த பைக் சாகசம் | Youth Drove Bike Super Fast And Passed Away

 யூடியூப்பர்கள் பறிபோகும் உயிர் 

தமிழ்நாட்டில் யூடியூப்பர்கள் சிலர், மின்னல் வேகத்தில் வாகனங்களை ஓட்டி அதை வீடியோவாக எடுத்து இணையத்திலும் பகிர்கின்றனர். இதுவே பலருக்கும் தவறான முன்னுதாரணமாகி விடுகிறது. மின்னல் வேகத்தில் வாகனம் ஓட்டி அதை வீடியோவாக எடுத்துப் பதிவிடும்போது, பல மோசமான விபத்துகள் ஏற்படுகிறது.

அப்படியொரு மிக மோசமான விபத்து தான் தலைநகர் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை தரமணி தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் பிரவீன்.. 19 வயதான இவர், சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.  

சாகச யூடியூப்பர்களால் தடம் மாறும் 2kகிட்ஸ் ? உயிரை பறித்த பைக் சாகசம் | Youth Drove Bike Super Fast And Passed Away

இவரது நண்பர் ஹரி. 17 வயதான இவர். வேளச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் +2 படித்து வந்தார். இதற்கிடையே இருவரும் பைக்கை மின்னல் வேகத்தில் இயக்கி, அதை வீடியோவாக எடுத்துப் போடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. பிரவீன் பைக்கை ஓட்ட ஹரி அவரது பின்னால் அமர்ந்து கொண்டார். தரமணி 100 அடி சாலையில் இவர்கள் அதிவேகமாக பைக்கை இயக்கியுள்ளனர்.

அசுர வேகம் பறிபோன உயிர்

இதனை அவர்கள் வீடியோவாகவும் மொபைலில் பதிவு செய்துள்ளனர். அப்போது எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் இருந்து வந்த லோடு வேன் ஒன்று தரமணி சந்திப்பு அருகே யூடர்ன் செய்துள்ளது. மின்னல் வேகத்தில் வந்ததால், வாகனத்தை அவர்களால் உடனடியாக நிறுத்த முடியவில்லை. லோடு வேனில் பைக் இடிக்காமல் இருக்க வாகனத்தை ஸ்லோ செய்த போது, திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

சாகச யூடியூப்பர்களால் தடம் மாறும் 2kகிட்ஸ் ? உயிரை பறித்த பைக் சாகசம் | Youth Drove Bike Super Fast And Passed Away

இதனால் இருவருக்கும் மிக மோசமான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விபத்து செவ்வாய்க்கிழமை நடந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இப்போது வெளியாகி உள்ளது. அதில் இருவரும் சுமார் 114 கிமீ வேகத்தில் தரமணி சாலையில் வேகமாகச் செல்கின்றனர்.

பலியான உயிர்கள்

அப்போது லோடு வேன் யூடர்ன் போடுவதைப் பார்த்து, இவர்கள் வண்டியை ஸ்லோ செய்ய முயலும்போது கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் அந்த வீடியோவில் மிகத் தெளிவாகப் பதிவாகி உள்ளது. அவர்கள் மின்னல் வேகத்தில் சென்றதே இந்த விபத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது. இதற்கிடையே படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அன்று இரவே சிகிச்சை பலனின்றி பிரவீன் இறந்தார். பின்னால் அமர்ந்திருந்த ஹரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், லோடு வேன் டிரைவர் குணசேகரனை (45) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாகச யூடியூப்பர்களால் தடம் மாறும் 2kகிட்ஸ் ? உயிரை பறித்த பைக் சாகசம் | Youth Drove Bike Super Fast And Passed Away

எல்லாவற்றையும் விட TTFவாசன் போன்ற சில யூடியூப்பர்கள் தாங்கள் பைக்கில் செய்யும் சாகசங்களை யூடியூப்பில் பதிவேற்றம் செய்கின்றனர். சமூக வலைத்தளங்களில், கட்டுப்பாடு குறைவாக உள்ளது , ஆகவே இதனை பார்க்கும் இளைஞர்கள் சாகச செய்யும் நோக்கத்தில் இளைஞர்கள் செய்யும் உயிரை பறிக்கின்றது. TTFவாசன் போன்ற யூடியூப்பார்கள் தாங்கள் செய்யும் வீடியோக்களை யாரும் முயற்ச்சிக்க வேண்டாம் எனக் கூறினாலும் , அவரை தலைவராக பார்க்கும் கூட்டம் கட்டுப்பாடுகளை மீறி தங்களின் உயிரை பணயமாக வைக்கின்றனர்.

சாகச யூடியூப்பர்களால் தடம் மாறும் 2kகிட்ஸ் ? உயிரை பறித்த பைக் சாகசம் | Youth Drove Bike Super Fast And Passed Away

ஆக இது போன்ற ஆபத்தான வீடியோக்களை செய்யும் யூடியூப்பர்கள் தங்களின் சாகசங்களின் சில பகுதிகளை எடிட் செய்து பதிவிடலாம், அல்லது பைக்கில் பயணம் செய்யும் போது ஏற்படும் விபத்துக்களை தடுக்க முன்னெச்சரிக்கை வீடியோக்களை பதிவிடலாம். இது அவரை ஹீரோவாக வைத்து கொண்டாடும் அவரது ரசிகர்களுக்கு சென்றடையும். இது எல்லாவற்றையும் விட தற்போது உள்ள மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான இடைவெளி குறைந்து வருகிறது.

அதற்கு முக்கிய காரணம் இணையம் , ஆகவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையினை கண்காணியுங்கள் , பருவ வயதில் அவர்களின் தடம் மாறாமல் ஒரு நணபனாக அறிவுரை கூறுங்கள் , உங்கள் பிள்ளைகளை பாரட்டுங்கள், துவண்டு போயிருக்கும் தருணங்களில் கைகளை பிடித்து ஆறுதல் கூறுங்கள், இது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் ,உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கைக்கும் ஒளிமயமானதாக அமையும்.

ஏனென்றால் இந்த முழு விபத்திற்கும் காரணம் மாணவனின் அதிவேகம் மட்டும் முழு காரணம் அல்ல.. இது போன்ற பைக் சாகசங்களை வீடியோவக பதிவிட்ட சில யூடியூப்பர்களுக்கும் பங்கு உண்டு என்பதுதான் வருத்தமான உண்மை, அடுத்து வரும் தலைமுறைக்கு இணையம் பெரிதும் உதவியாக உள்ளது.

ஆனால் இது போன்ற உயிரை பலி வாங்கும் மரண சாகசங்களை செய்து வித்தை காட்டும் யூடியூப்பர்கள் கொஞ்சம் சமுதாய பொறுப்பினை வாயால் கூறாமல் செயலில் செய்து காண்பிக்க வேண்டும் என்பதுதான் இங்கு பல பெற்றோர்கள்மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையும் கூட.