சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு - உறவினர்கள் கதறல்

Death
By Thahir Oct 07, 2022 08:31 AM GMT
Report

திருவாரூரில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு 

திருவாரூர் மாவட்டம் திருவாசல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த செல்லதுரை என்பவரின் மகன் விக்னேஷ். இவருடைய மனைவி மாரியம்மாள் (26).

இவர் 5 மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில், இவருக்கு பூ முடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு - உறவினர்கள் கதறல் | Youth Dies After Eating Chicken Biryani

இந்த நிகழ்வில், 5 வகை சாதத்துடன் சேர்த்து சிக்கன் பரிமாறப்பட்டது. இந்த சாப்பிட்ட சிறிது நேரத்தில், கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வேலங்குடியைச் சேர்ந்த செல்வமுருகன் (24) சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.