கொதிக்கும் ரசத்தில் விழுந்த இளைஞர் - துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்
மாணவர் கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பார்ட் டைம் வேலை
திருவள்ளூர், மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(20). அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு பயின்று வந்தார். மேலும், குடும்ப வறுமைச் சூழலின் காரணமாக கல்லூரி விடுமுறை நாள்களில் விசேஷ வீடுகளில் சமையல் செய்வது,
பந்தி பரிமாறுவது உள்ளிட்ட கேட்டரிங் வேலைகளுக்கும் சென்று வந்தார். இந்நிலையில், திருமண மண்டபம் ஒன்றில் சமையல் வேலைக்குச் சென்றிருந்தார். அப்போது அங்கு பெரிய அண்டாவில் கொதித்துக் கொண்டிருந்த ரசத்தில் தவறி விழுந்து விட்டார்.
பரிதாப பலி
இதில் அவர் உடல் முழுவதும் கடுமையாக தீக்காயங்கள் ஏற்பட்டது. உடனே, சமையல் பணியில் இருந்தவர்கள் சதீஷை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தொடர் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து, போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.