மனைவி கேட்ட ஒரு கேள்வி - தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட கணவன்

chennai suicide
By Petchi Avudaiappan Sep 06, 2021 08:00 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

திருவொற்றியூர் பகுதியில் மனைவி திட்டியதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள வேலாயுதம் நகரைச் சேர்ந்தவர் லோகேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ராயபுரத்தில் உள்ள தனியார் அச்சகத்தில் வேலை பார்த்து வந்தார்.

வேலைக்கு சென்ற நிலையில் இவருக்குக் கடந்த சில மாதங்களாகவே அந்நிறுவனத்தில் சம்பளம் கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வீட்டில் கணவர் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

வேலைக்குச் சென்றும், சம்பளம் இல்லை என்றால் எப்படி குடும்பம் நடத்துவது எனக் கேட்டு லோகேஷின் மனைவி அவரிடம் சண்டையிட்டுள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த லோகேஷ் நேற்று காலையில் தூங்கச் செல்வதாகக் கூறி படுக்கை அறைக்குச் சென்று கதவைச் சாத்திக் கொண்டுள்ளார்.

வெகு நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்தபோது, லோகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து திருவொற்றியூர் போலீசார், லோகேஷ் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்,