இன்ஸ்டாகிராம் நெருக்கம்.. ஆசையில் இளைஞர் - கடைசியில் பாட்டியிடம் ஏமாந்த பரிதாபம்!
சமூக வலைதளத்தில் பழகிய இளைஞரை, பெண் ஒருவர் நகை, பணத்தை பறித்து ஏமாற்றியுள்ளார்.
இன்ஸ்டாகிராம்
சேலம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன்(62). இவர் ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர். இவரது மகன் ஸ்டீபன்(24). மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பெண் ஒருவரிடம் பேசி வந்துள்ளார்.
சேலம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் சரண்யா. இவர்தான் பழகி இருக்கிறார். தொடர்ந்து வாட்ஸ் அப் மூலமும் பேசியுள்ளனர். மேலும், சரண்யா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் கட்டாயப்படுத்தியுள்ளார்.
ஏமாந்த இளைஞர்
அதனையடுத்து ஸ்டீபன் இதுகுறித்து அவர் குடும்பத்தாரிடம் பேசியுள்ளார். அவர்களும் ஒப்புக்கொண்டு, வாழப்பாடி அருகே உள்ள பேளூர் ஈஸ்வரன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. கடந்த நான்கு மாத காலமாக ஸ்டீபன் வீட்டில் வசித்து வந்த சரண்யா அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று வெளியில் தங்கி இருப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதுகுறித்து ஸ்டீபனின் பெற்றோர்கள் கேட்ட போது உறவினர்கள் வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஸ்டீபன் வீட்டிலிருந்த சரண்யா திடீரென மாயமானார். அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
அதிர்ச்சி தகவல்
மேலும், வீட்டில் இருந்து 30 பவுன் தங்க நகை மற்றும் 2 லட்சம் ரொக்க பணம் எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. அதனையடுத்து சரண்யா மீது போலீஸில் புகாரளித்ததில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். பின்னர் அவரது செல்போன் எண்ணை வைத்து கண்டுபிடித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில்
அவருக்கு ஏற்கனவே சேலம் சன்னியாசி குண்டு பகுதியில் வசித்து வரும் பன்னீர்செல்வம் என்பவருடன் திருமணம் நடைபெற்றதும் அவர்கள் இருவருக்கும் மூன்று மகன்கள் இருப்பதும் அதில் மூத்த மகனுக்கு திருமணம் நடைபெற்றதும் பேரப்பிள்ளைகள் இருப்பதும் தெரிந்து அதிர்ந்தனர்.
மேலும், சரண்யாவும், கணவனும் கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருவதாகவும், அதன் பிறகு சரண்யாவுக்கு சென்னையைச் சேர்ந்த ஒருவருடனும் கோவையைச் சேர்ந்த ஒருவருடனும் திருமணம் நடைபெற்றதாகவும்,
அதன்பின் ஸ்டீபனை திருமணம் செய்ததாகவும் ஒப்புக்கொண்டார். இதற்கு ரகுவரன் என்பவர் தாய்மாமனாக நடித்து உறுதுணையாக இருந்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்துள்ளனர்.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
