தேர்தல் பிரச்சாரத்தில் பாம்புடன் ஜாலியாக சுற்றித்திரிந்த வாலிபர் - அலறிய பொதுமக்கள்!

Tamil nadu Salem Lok Sabha Election 2024
By Jiyath Apr 16, 2024 05:26 AM GMT
Report

தேர்தல் பிரச்சாரத்திற்கு இளைஞர் ஒருவர் பாம்புடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

பாம்புடன் வாலிபர்     

சேலம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். இவர் சேலம் மாவட்டம் கோட்டகவுண்டம்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தேர்தல் பிரச்சாரத்தில் பாம்புடன் ஜாலியாக சுற்றித்திரிந்த வாலிபர் - அலறிய பொதுமக்கள்! | Youth Came With A Snake To The Election Campaign

அப்போது அதே பகுதியைச் சேர்ந்தவரான ஒரு வாலிபர் நல்ல பாம்பு ஒன்றை பிடித்து, கழுத்தில் போட்டுக்கொண்டு அந்த கூட்டத்திற்கு வந்தார். அவர் தனது 2 கைகளிலும் பாம்பை பிடித்துக் கொண்டு, பிரசாரம் நடந்த பகுதியில் சுற்றித் திரிந்தார்.

ரயில் டிக்கெட் பரிசோதகருடன் தகராறு - ஆத்திரத்தில் பெண் பயணி செய்த காரியம்!

ரயில் டிக்கெட் பரிசோதகருடன் தகராறு - ஆத்திரத்தில் பெண் பயணி செய்த காரியம்!

விசாரணை 

இதனால் அந்த கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் பீதியடைந்தனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த போலீசார் அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஆனால் அவர் பிரச்சாரம் முடியும் வரை அங்கு சுற்றித்திருந்தார்.

தேர்தல் பிரச்சாரத்தில் பாம்புடன் ஜாலியாக சுற்றித்திரிந்த வாலிபர் - அலறிய பொதுமக்கள்! | Youth Came With A Snake To The Election Campaign

டி.எம்.செல்வகணபதி தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்ற பிறகு தான் அந்த வாலிபரும் அந்த இடத்தில் இருந்து சென்றார்.  இந்நிலையில் அந்த வாலிபர் யார்? என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.