விருந்து நிகழ்ச்சி - நண்பரின் செயலால் காதை கடித்து விழுங்கிய இளைஞர்!
நண்பரின் காதை இளைனர் ஒருவர் கடித்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருந்து நிகழ்ச்சி
மும்பை, பட்லிபாடாவில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு வசித்து வருபவர் ஷரவன் லீகா(37). இவரது நண்பர் விகாஸ் மேனன்(32). இருவரும் தனது சக நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டனர்.
அதில், ஷரவன் லீகாவுக்கும், விகாஸ் மேனனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விகாஸ் மேனன் திடீரென நண்பரின் காதை கடித்துள்ளார்.
நண்பரின் செயல்
இதில் ஷரவன் வலியில் துடித்துள்ளார். இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் காதை கடித்து ஒரு பகுதி துண்டை மென்று விழுங்கியுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கி சிகிச்சை நடைபெற்று வருகிறது. தற்போது இதுகுறித்த புகாரின் பேரில் விகாஸ் மேனன் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.