பைக்கில் சாகசம் செய்ய முயன்ற இளைஞர் - டேங்கர் லாரியில் மோதிய அதிர்ச்சி வீடியோ

bikestunt
By Petchi Avudaiappan Nov 02, 2021 05:15 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விபத்து
Report

பைக்கில் சாகசம் செய்ய முயன்ற இளைஞர் விபத்தில் சிக்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில், செய்யும் ஒரு சில சாகச செயல்களினால் பேராபத்தை சந்திக்கின்றனர். குறிப்பாக பைக்கில் செய்யும் சாகசங்கள் பல நேரங்களில் உயிர்பலியை ஏற்படுத்தி விடுகிறது. 

அந்த வகையில் இளைஞர் ஒருவர் மிக ஆபத்தான முறையில் சாலையில் பைக்கில் சாகசம் செய்ய முயன்று விபத்தில் முடிந்த வீடியோவானது இணைய சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் இளைஞர் முன் டயரை தூக்கி பைக்கை ஓட்டிச்செல்லும் போது முன்னே சென்றுகொண்டிருந்த டேங்கர் லாரியில் மோதி வெடித்து சிதறுகிறது. இளைஞர்கள் இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என தெரியவில்லை. ஆனால் சாகச செயல்கள்  எப்போது வேண்டுமானாலும் ஆறாத வலியை ஏற்படுத்தி விடும் என்பதே உண்மை.