அமிர்தசரஸ் பொற்கோயில் கருவறைக்குள் புகுந்து மர்ம நபர் அடித்துக் கொலை - அதிர்ச்சி தகவல்

goldentemple youthbeatentodeath
By Petchi Avudaiappan Dec 18, 2021 10:38 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

அமிர்தசரஸ் பொற்கோயில் கருவறைக்குள் புகுந்து இடையூறு விளைவித்ததாகக் கூறி 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கோயில் வளாகத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீக்கிய மக்களின் புனிதத் தலங்களில் ஒன்றான அமிர்தசரஸ் பொற்கோயில் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது. சீக்கியர்களின் நான்காம் குருவான குரு ராம் தாஸ் என்பவரால் 1604 ஆம் ஆண்டு இந்த கோயில் இந்தியாவின் அம்ரித்சர் நகரில் அமைக்கப்பட்டது.

இந்த பொற்கோயிலில் தினசரி மாலை வேலையில் பிரார்த்தனைகள் நடக்கும். அப்படி நேற்று மாலை நடைபெற்ற பிரார்த்தனையின் போது கோயில் கருவறையாகக் கருதப்படும் இடத்தில் புகுந்து சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப் முன் வைக்கப்பட்டிருந்த வாளை அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க நபர் தொட முயன்றதாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பான காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆத்திரமடைந்த சீக்கியர்கள் அந்த நபரைப் பிடித்து கடுமையாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவலும் வெளியானது. 

இதனிடையே இங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம். விரைவில் இந்தச் சம்பவம் குறித்து அனைத்து தகவல்களும் தெரிய வரும். உயிரிழந்தவரின் உடல் இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்படும். அவர் யார். எங்கிருந்து வந்தார், எதற்காக இதுபோன்ற செயலில் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று அமிர்தசரஸ் துணை போலீஸ் கமிஷனர் பர்மிந்தர் சிங் பந்தல் தெரிவித்துள்ளார்.