பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது
வேதாரண்யம் அருகே பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள பஞ்சநதிக்குளம், ஆவடைக்கோண்காடு பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் அதே ஊரில் உள்ள 11 வயது பள்ளி மாணவனுக்கு போதைப் பொருளை கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை வாய்மேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராமமூர்த்தியை போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர். பிறகு நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.