17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தவர் கைது

Chennai Sexual abuse
By Petchi Avudaiappan Jun 06, 2021 05:27 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

சென்னை அடையாறு பகுதியில் 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த நபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சென்னை அடையாறு பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியர் தனது 17 வயது மகளை கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் காணவில்லை என்று கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன் பேரில் சிறுமியை காணவில்லை என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 17 வயது சிறுமியை அதே பகுதியில் வசித்து வரும் சுதாகர் (30) என்பவர் காதலித்து வந்துள்ளதும், திருமண செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்திச் சென்றுள்ளதும் தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் மேற்படி சுதாகரை பிடித்து விசாரணை செய்தனர்.இந்த விசாரணையில் சுதாகர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றும், திண்டிவனத்தில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றும் கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளதும் தெரியவந்தது.

 இதனையடுத்து அந்த வழக்கை கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்தனர். அதனடிப்படையில் கிண்டி அனைத்து மகளிர் காவல் துறையினர் சுதாகர் மீது போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

மேலும், மீட்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட சுதாகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.