70 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் - கொடூரம்!
70 வயது மூதாட்டிக்கு இளைஞர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொல்லை
மதுரை, சோழவந்தான் கருப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பொட்டை அம்மாள்(70). இவர் தனியாக வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் சண்முகம் என்பவரது மகன் மணிமாறன் (30). மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டினுள் புகுந்த மணிமாறன் அவரை கல்லால் தாக்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது மணிமாறன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அதனை தொடர்ந்து காயமடைந்த மூதாட்டியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மூதாட்டியின் சகோதரர் சம்பவம் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இளைஞர் கைது
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிமாறனை கைது செய்தனர். மணிமாறன் ஏற்கனவே கடந்த ஆண்டு சோழவந்தானில் மூதாட்டி ஒருவரை கற்பழிக்க முயன்று அவரை கொலை செய்த சம்பவத்திலும்
மேலும் பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டதால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வெளியே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.