மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம்: மோசடி நபர் அதிரடி கைது
காரைக்குடியில் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த பெண் ஒருவருக்கும், திருப்பத்தூரை சேர்ந்த ஹனீப் என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், வரதட்சணையாக மட்டும் சுமார் 101 பவுன் நகை பெற்றதாக கூறப்படுகிறது. இதனிடையே மேலும் வரதட்சணை கேட்டு அப்பெண் வீட்டார் கொடுக்காததால் மனைவியை காரைக்குடியில் விட்டுவிட்டு ஹனீப் சென்னை சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஹனீப் முதுகுளத்தூர் சேர்ந்த பெண் ஒருவரை தனது முதல் மனைவி வீட்டிற்கு தெரியாமல் மணம் முடித்துக் கொண்டதாக காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்காததால் உயர்நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசாருக்கு உத்தரவிட வழக்கு தொடுக்கப்பட்டது.
இதனையடுத்துஉயர்நீதிமன்றற உத்தரவின் பேரில் முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ததாக ஹனீப் மீது காரைக்குடி அனைத்தும் ஒரே பாலினத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று காலை கைது செய்யப்பட்டார். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.