கடத்தப்பட்ட 10 ஆம் வகுப்பு மாணவி : தர்மபுரியில் ஓர் அதிர்ச்சி சம்பவம்
தர்மபுரி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு மாணவியை கடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சார்ந்த பத்தாம் வகுப்பு மாணவி கடந்த சில தினங்களுக்கு பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
ஆனால் மாணவி கிடைக்காததால் அரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது மகளை கடத்தி இருக்கலாம் என சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் பாஸ்கர் அதே பகுதியில் உள்ள ஒரு மலை கிராமத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் அதிரடியாக செயல்பட்டு மாணவியை மீட்டனர். போக்சோ சட்டத்தின் கீழ் பாஸ்கர் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.