முதலிரவு முடிந்ததும் மணமகளின் 30 பவுன் நகையுடன் மாயமான மணமகன்

kerala moneytheft
By Petchi Avudaiappan Feb 02, 2022 10:58 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

கேரளாவில் முதலிரவு முடிந்ததும் மணமகளின் 30 பவுன் நகை மற்றும் பணத்துடன் மணமகன் மாயமான சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் அடூர் காயங்குளம் பகுதியை சேர்ந்த அசாருதீன் ரஷீத்துக்கும் பழக்குளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மணமகள் வீட்டில் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி விமரிசையாக திருமணம் நடைபெற்றது. 

கொரோனா கட்டுப்பாடு காரணமாக திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் திருமணம் முடிந்து இருவருக்கும் மணமகள் வீட்டில் விருந்து நடந்தது. அன்று இரவு அவர்களுக்கான முதலிரவு சடங்கும் மணமகள் வீட்டிலேயே நடைபெற்றுள்ளது.

முதலிரவு முடிந்து மறுநாள் அதிகாலை 3 மணி அளவில் மணமகன் திடீரென வீட்டில் இருந்து வெளியே கிளம்பியுள்ளார். எங்கே செல்கிறீர்கள் என மணமகள் கேட்க, அதற்கு நெருங்கிய நண்பன் விபத்தில் சிக்கியதாக தகவல் வந்தது. அவருக்கு உதவுவதற்காக உடனே செல்ல வேண்டியுள்ளது என்று கூற பெண் வீட்டாரும் அனுமதித்துள்ளனர். 

வீட்டை விட்டு சென்ற மணமகன் நாள் முழுவதும் திரும்ப வராமலும், மணமகளிடமும் பேசாததால்  அவரை உறவினர்கள் தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண்ணின் உறவினர்கள் முதலிரவு அறைக்கு சென்று பார்த்த போது அங்கு மணமகள் அணிந்திருந்த 30 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. இதுபோல அறையில் இருந்த ரூ.2.75 லட்சம் பணத்தையும் காணவில்லை. இதனால் பதறி போன மணப்பெண்ணின் உறவினர்கள் அடூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மாயமான மணமகன் அசாருதீன் ரஷீத்தை தேடினர்.

இதில் அசாருதீன் ரஷீத் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும் அவரது முதல் மனைவி ஆலப்புழாவை அடுத்த சேப்பாடு பகுதியில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.