நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச படங்களை அனுப்பிய இளைஞர் கைது

Actress sanam shetty Illegal message Chennai cyber crime police
By Petchi Avudaiappan Jul 06, 2021 09:07 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகை சனம் ஷெட்டிக்கு வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாசக் குறுஞ்செய்திகள் மற்றும் படங்களை அனுப்பியதாக திருச்சியை சேர்ந்த இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் நடித்து வருபவர் சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்தார்.

நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச படங்களை அனுப்பிய இளைஞர் கைது | Youth Arrested For Illegal Sms To Actor Sanam

இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி தனது வாட்ஸ்-ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு மர்ம நபர் ஒருவரிடமிருந்து ஆபாசக் குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வருவதாக அடையாறு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து, ஆபாசக் குறுஞ்செய்திகள் வந்த வாட்ஸ்-ஆப் எண்ணையும், இன்ஸ்டாகிராம் பக்கத்தையும், இதர ஆதாரங்களையும் வழங்கினார்.

இதனையடுத்து இது தொடர்பாக அடையாறு சைபர் கிரைம் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். இதனடிப்படையில் திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ராய் அடையாறு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.