பெண்களின் உள்ளாடையை திருடி தூங்கும் சைக்கோ.. நள்ளிரவில் வீடு புகுந்து செய்த காரியம் - அதிர்ச்சி!
இளைஞர் ஒருவர் பெண்களின் உள்ளாடையை திருடி சீண்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் சீண்டல்
தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியில் இரவு நேரத்தில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் கத்திமுனையில் மிரட்டி பாலியல் சீண்டல்களில் ஒரு மர்ம மனிதன் ஈடுபட்டு வருவதாக சேலையூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ளவர்களும் இரவு நேரத்தில் ரகசியமாக கண்காணித்து கொண்டிருந்தனர். அப்பொழுது வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படி நடந்து சென்றுள்ளார், அவரிடம் விசாரித்தபொழுது முரணாக பதிலளித்துள்ளார். இத்தன்னால் அவரை புரட்டி எடுத்த மக்கள் போலீஸிடம் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணை
இந்நிலையில், போலீசார் அவரை விசாரித்த பொழுது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. இவர் தஞ்சாவூரை சேர்ந்த 28 வயதான தமிழ் பிரபு, இவர் கார் டிரைவராக வேலை பார்க்கிறார். அதனால் சேலையூரில் வாடகை வீட்டில் தங்கி உள்ளார். இவருக்கு பெண்களின் உள்ளாடைகளை திருடி தனது அறைக்கு கொண்டு சென்று தன் அருகே வைத்து கொண்டு தூங்கும் வினோத பழக்கம் உள்ளது.
ஒரு கட்டத்தில் பெண்களை பாலியல் ரீதியாக சீண்டி பார்க்க நினைத்து வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை தேடி கத்திமுனையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சத்தமின்றி தனது ஆசை தீர சில்மிஷம் செய்து விட்டு சத்தமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறி விடுவார்.
இவ்வாறு பல பெண்களுக்கு நடந்துள்ளது, பெண்கள் இதனை அவமானமாக கருதி யாரும் புகாரளிக்க முன்வரவில்லை. தற்பொழுது போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.