உங்க பேச்சு தமிழ்நாட்டை தாண்டி கேட்காது - ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்
நீங்க அப்படி கூப்பிடுவது தமிழ்நாட்டை தாண்டி யாருக்கும் தெரியாது - ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டை தாண்டி கேட்காது
குடிமைப்பணியின் நேர்முக தேர்வுக்கு செல்ல உள்ள மாணவர்களுடன் ஆளுநர் ஆர் என் ரவி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கலந்துரையாடினார்.
அப்போது அவர்கள் மத்தியில் பேசிய அவர், ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை அதை அரசியலாக்கும்போது தான் பிரச்சனை ஆகிறது. ஒன்றிய அரசு என அழைத்து அவமதிக்கும் போதுதான் அது பிரச்சனையை ஏற்படுத்துகிறது. ஒன்றிய அரசு என்ற பிரச்சனை பற்றி தமிழ்நாட்டை தாண்டி யாருக்கும் தெரியாது.
தனி நாகாலாந்து கேட்டுகும் நாகா குழுக்களின் எண்ணம் என்பது நாகா இனத்தின் ஒட்டுமொத்த மக்களின் எண்ணமல்ல நீங்க அப்படி கூப்பிடுவது தமிழ்நாட்டை தாண்டி யாருக்கும் தெரியாது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
நேற்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரின் உரை வருந்தத்தக்கதாக உள்ளதாக தெரிவித்த நிலையில் ஆளுநர் பேரவையில் இருந்து வெளியேறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.