தேவாலயத்தில் மோதல் - 1000 பேர நா இறக்கவா..? மல்லுக்கட்டிய அண்ணாமலை- ஊர் மக்கள்..!
கிறிஸ்தவ தேவாலயத்தில் அன்னையின் உருவ சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அண்ணாமலைக்கு அப்பகுதி இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணாமலை பாதயாத்திரை
தமிழகத்தில் பல்வேறு பகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாதயாத்திரை என் மண் என் மக்கள் என்ற பெயரில் மேற்கொண்டு வருகின்றார். தென்மாவட்டங்களில் துவங்கிய அவரின் பாதயாத்திரை தற்போது தருமபுரி வந்துள்ளார்.
கடந்த 7, 8ம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், பொம்மிடி அருகே உள்ள பி.பள்ளிப்பட்டி புகழ்பெற்ற கிறுஸ்தவபுனித லூர்து அன்னை மலைக்கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய சென்றுள்ளார்.
எங்க கோவில் இது..?
இந்த செய்தியை அறிந்த அப்பகுதி மக்கள், அங்கு திடீரென கூடி அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மணிப்பூர் கலவரத்தை சுட்டிக்காட்டி பேசிய அவர்களில் சிலர், அப்போது பாஜக என்ன செய்தது என்று வினவினர்.
அப்போது இளைஞர் ஒருவர் எங்க கோவில் இது..? என்று அண்ணாமலைக்கு மறுப்பு தெரிவித்தார். வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டு பிறகு, அன்னைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சென்றுள்ளார் அண்ணாமலை. முன்னதாக அண்ணாமலை தரப்பிற்கும், ஊர் மக்களுக்கும் ஏற்பட்ட வாங்குவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.