சிறுவனுக்கு வலுக்கட்டாயமாக மது ஊற்றியதால் மயக்கம் - இளைஞர்கள் மோசச்செயல்!
திருவண்ணாமலையில் ஒரு சிறுவனுக்கு கட்டாயப்படுத்தி மதுவை ஊற்றியதால் மயக்கமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெம்பாக்கம்
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த சோதியம் பாக்கம் என்னும் கிராமத்தில் இருக்கும் 11 வயதே ஆன சிறுவன்.
இவர், அதே பகுதியில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகிறார். கடந்த 24-ம் தேதி பெற்றோரிடம் விளையாட செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
பின்னர் அவர் வீடு திரும்பவே இல்லை, இதனால் பதற்றமடைந்த பெற்றோர் தேடியுள்ளனர்.
அப்போது அங்கு உள்ள ஒரு ஏரிக்கரையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
தொடர்ந்து
அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
விசாரணை இந்நிலையில், மயக்கம் தெளிந்த சிறுவனிடம் விசாரிக்கையில், சில இளைஞர்கள் வலுக்கட்டாயமாக மது ஊற்றிவிட்டதாக கூறியுள்ளார்.
இதனை வழக்கு பதிவு செய்து தூசி காவல்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அந்த ஊரில் உள்ள பிரபல தனியார் மதுபான கூடத்தில் சிறுவனை அமர வைத்துக் கொண்டு 4 இளைஞர்கள் மது குடிக்கும் காட்சி வெளியான நிலையில், 11 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி மதுவை ஊற்றியுள்ளனர்.
மேலும், காவல் துறையினர் இதனை வழக்கு பதிவு செய்து சமந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.