மஞ்சும்மல் பாய்ஸ் Effect - குணா கேவ்ஸ்'ஸில் அத்துமீறி மாட்டிக்கொண்ட இளைஞர்கள்
மலையாள படமான மஞ்சும்மல் பாய்ஸ் படம் சினிமா ரசிகர்களிடம் பெரும் கவனத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
மஞ்சும்மல் பாய்ஸ்
"மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல" என்ற வசனமே தற்போது தென்னிந்தியாவை ஆட்டிப்படைகிறது.
கமல்ஹாசனின் இந்த காதல் வசனத்தை நட்பிற்கான இலக்கணமாக மாற்றி, பெருமளவில் ரசிக்க வைத்துள்ளது மலையாள படமான மஞ்சும்மல் பாய்ஸ்.
கொடைக்கானல் "குணா கேவ்ஸ்" பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இப்படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அத்துமீறி
இப்படம் வெளியானதை அடுத்து பலரும் கொடைக்கானலில் அமைந்துள்ள குணா குகைக்கு செல்ல துவங்கிவிட்டனர். இதனால் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டு விடுமோ என்று பல சமூக ஆர்வலர்களும், காவலர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
கடும் கட்டுப்பாடுகளை மீறியும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் குணா குகைக்குள் சென்றுள்ளனர்.
கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த விஜய், பரத் மற்றும் ரஞ்சித் ஆகியோர் தற்போது வனத்துறை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.