இளைஞர் இறந்ததால் இறுதி சடங்கிற்கு ரெடியான குடும்பம், திடீரென உடலில் கேட்ட அந்த சத்தம் - அதிர்ச்சி!
இறுதிச்சடங்கிற்கு சென்ற இளைஞர் திடீரென பிழைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை
மணப்பாறை அருகே மருங்காபுரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டி நாயக்கர் என்ற இளைஞர், இவர் திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனால் இவரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவரது சிகிச்சைக்கு போதுமான பணம் இல்லாததால் அவரது குடும்பம் அவரை அரசு மருத்துவமனைக்கு மற்ற முடிவு செய்தனர்.
இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தபோது திடீரென பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார்.
இறுதிச்சடங்கு
இந்நிலையில், அந்த இளைஞரின் உறவினர்கள் அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு செய்து மயானத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர். அப்பொழுது திடீரென ஆண்டி நாயக்கர் மூச்சுவிடும் சத்தம் கேட்டது, பிறகு அவர் கண்விழித்தார்.
அதில் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர், அதன்பிறகு தான் அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது, இதனையடுத்து குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.