'இளைஞர்களிடம் ராணுவத்தில் சேர ஆர்வம் வர வேண்டும்' - 350 கிலோமீட்டர் ஓடிச்சென்ற இளைஞனின் வைரல் வீடியோ

jantarmantarprotest armyrecruitmentdelay sureshbhichar 350kms sikartodelhi
By Swetha Subash Apr 06, 2022 07:21 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

இந்திய ராணுவத்தில் சேர தனக்கு இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாக இளைஞர் ஒருவர் 350 கிலோமீட்டர் ஒட்டிசென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், நகார் மாவட்டத்தை சேர்ந்த 24 வயதான சுரேஷ் பிச்சார், இந்திய ராணுவத்தில் சேர ஆர்வமுடையவர். அவரின் இந்த ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாக,

கையில் இந்திய தேசிய கொடியை ஏந்திய படி, சிக்கார் பகுதியில் இருந்து டெல்லி வரை சுமார் 50 மணி நேரம் ஓடியப்படியே 350 கிலோமீட்டர் சென்றுள்ளார். சிக்காரில் இருந்து கடந்த மார்ச் 29-ந் தேதி புறப்பட்டு கடந்த 5-ந் தேதி டெல்லியை சென்ரு அடைந்துள்ளார் இந்த இளைஞர்.

இது குறித்து சுரேஷ் கூறுகையில்,

“எனக்கு இந்திய ராணுவத்தில் சேர மிகுந்த ஆர்வம் இருக்கிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகள் காலமாக ராணுவத்தில் ஆள் சேர்க்கும் பணியை அரசு நிறுத்திவைத்துள்ளது.

இதனால் நகார், சிக்கார் மற்றும் ஜுஞ்சுனு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ராணுவத்தில் சேருவதற்கான குறிப்பிட்ட வயதை கடந்து விடுகிறார்கள்.

மேலும் இளைஞர்கள் மத்தியில் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தவே நான் டெல்லி வரை ஓடியப்படி வந்தடைந்துள்ளேன்.” என தெரிவித்தார்.

ராணுவத்தில் ஆள் சேர்க்கும் பணியை தொடங்காமல் தாமதம் செய்து வருவதை கண்டித்து கடந்த செவ்வாய் கிழமையன்று டெல்லியின் ஜந்தர் மந்தரில் 1000 கணக்கானோர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் அதில் பங்கேற்க சுரேஷ் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.