கோழிக்கறி கேட்டது ஒரு குத்தமா? - நண்பனை போட்டுத்தள்ளிய இளைஞர்!
தெலுங்கானாவில் ஒருவர் தனது நண்பரிடம் கோழிக்கறி சமைத்து தரும்படி கேட்டதும் அவரை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நண்பர்கள்
தெலுங்கானா மாநிலம், கோச்சாரம் பகுதியை சேர்ந்தவர் சுசீல்கோஸ்வாமி. இவர் தனது நண்பர்களான தீரஜ் மண்டல், சுஜித்விஜய்கோஸ்வாமி, பாலா நிமிஷ்குமார் ஆகியோருடன் சேர்ந்து நேற்று முன்தினம் ஒன்றாக அமர்ந்து குதித்துள்ளனர்.
அப்போது சுசீலிடம், தீரஜ் மண்டல் தனக்கு கோழிக்கறி சமைத்து தரும்படி கேட்டுள்ளார், இதனால் இவர்கள் இரண்டுபேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அனைவரும் ஒரே வீட்டில் ஒன்றாக சேர்ந்து உறங்கினர்.
கொலை
இந்நிலையில், சுசீல்கோஸ்வாமி அருகில் இருந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து தனது நண்பரான தீரஜின் தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
இதனால் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஐடி காரிடார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், தப்பி சென்ற சுசீல்கோஸ்வாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.