முட்டி போட வைத்த ஆட்டோ டிரைவர் - ஆத்திரத்தில் கொடூரமாக வெட்டி கொன்ற இளைஞர்!

Attempted Murder Death
By Vinothini Jun 27, 2023 11:30 AM GMT
Report

முட்டி போட வைத்த ஆத்திரத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை

அம்பத்தூர், மங்களபுரம் பகுதியை சேர்ந்தவர் விடியல், இவருக்கு 30 வயதே ஆன நிலையில் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர் கடந்த ஆண்டு சதிஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் சிறை சென்று வந்தார்.

youngster-killed-a-auto-driver

நேற்று இரவு இவர் தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது, அங்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால், அப்பகுதியை சேர்ந்த ரிஷி, சுர்ஜித், கபில் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணை

இதனை தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தியதில், நேற்று முன்தினம் கபில் என்பவர் கருப்பு நிற வேஷ்டி அணிந்து சென்றுள்ளார். அப்பொழுது இதனை பார்த்த ஆட்டோ டிரைவர் அவரிடம் தகராறில் ஈடுபட்டார்.

youngster-killed-a-auto-driver

"நீ என்ன பெரிய ரவுடியா, கருப்பு நிற வேட்டி அணிந்து செல்கிறாய்" என்று கூறி கபிலை அடித்து நடுரோட்டில் முட்டி போட வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கபில் பழிவாங்கும் நோக்கத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து இவரை வெட்டி கொலை செய்ததாக தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.