முன் விரோதம் காரணமாக இளைஞரை சிறுநீர் குடிக்க வைத்த அவலம் ; சம்பந்தப்பட்டவர்களுக்கு போலிசார் வலைவீச்சு

rajasthan urine forced youngster to drink enemity
By Swetha Subash Jan 30, 2022 12:00 PM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

பழைய விரோதம் காரணமாக மதுபாட்டிலில் சிறுநீர் கழித்து இளைஞர் ஒருவரை குடிக்க வைத்த சம்பவம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ருக்காசர் கிராமத்தைச் சேர்ந்த தலித் சமுதாய இளைஞர் ராகேஷ் மேக்வால் கடந்த 27-ந் தேதி உள்ளூர் போலீசாரிடம் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அந்த புகாரில் பழைய விரோதம் காரணமாக சிலர் தன்னை வீட்டில் இருந்து இரவு நேரத்தில் கடத்திச் சென்று வயல் பகுதி அருகே மது குடிக்க வற்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, அவர்கள் மதுபாட்டிலில் சிறுநீர் கழித்து அதை தமது தொண்டைக்குள் வலுக்கட்டாயமாக புகுத்தியதாகவும் தனது புகாரில் அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமது சாதி குறித்து இழிவாக பேசியதாகவும் கூறியுள்ளார். மேக்வாலின் முதுகில் இருந்த காயங்கள் அவர் தாக்கப்பட்டதை உறுதி செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட 8 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உமேஷ் மற்றும் பீர்பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர்.

எனினும் மேக்வால் சிறுநீர் குடிக்க வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு இன்னும் நிரூபிக்கப்படவில்லை என விசாரணை அதிகாரி ஹிமான்ஷு சர்மா தெரிவித்தார்.