"நான் உதயநிதி ஸ்டாலினோட பி.ஏ, என்னை ஒன்னும் பண்ண முடியாது" - ஆள்மாறாட்டம் செய்த இளைஞரை அலேக்காக தூக்கிய காவல் துறை
திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினின் பி.ஏ. எனக் கூறி, அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.4.5 லட்சம் வசூலித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் கருணாமூர்த்தி என்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்டவர் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேன்மொழி ஆவார்.
மாநில காவல்துறை தலைமையகத்தில் இருந்து வெளியான செய்திக்குறிப்பில்,
பாதிக்கப்பட்ட தேன்மொழி கடந்த 2018-ம் ஆண்டில் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, ராஜேஷுக்கு தவணை முறையில் பணத்தை செலுத்தியுள்ளார்.
அரசு வேலை கிடைக்காததாலும், பணத்தை திருப்பி தராததாலும், தேன்மொழி திருப்பத்தூர் போலீசில் புகார் செய்தார்.
விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே ராஜேஷிடம் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது. அவர் உதயநிதி ஸ்டாலினுக்கு பி.ஏ., அவரை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி அப்பெண்ணை மிரட்டியுள்ளார்.
இந்த தொலைபேசி உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி காவல் நிலைய போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, உதயநிதியின் பெயரைச் சொல்லி மிரட்டி பெண்ணை ஏமாற்றிய ராஜேஷை கைது செய்தனர்.
ராஜேஷுக்கு எந்த அரசியல் கட்சி சார்பும் இல்லை என்றும், பண மோசடி குற்றத்தில் இருந்து தன்னை காபாற்றிக்கொள்ள ராஜேஷ் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்றும்,
அவர் ஏமாற்றுதல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்ததற்காக முன்பு கைது செய்யப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினரிடம் தான் செய்த மோசடி குறித்து ராஜேஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்,