“நான் முதல்வன் - உலகை வெல்லும் இளைய தமிழகம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
எனது கனவு திட்டமான திறன் மேம்பாட்டு திட்டத்தை துவக்கி வைத்தது என் வாழ்வின் பொன்னாள் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் பள்ளி கல்லூரி மாணவ்ர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் , நான் முதல்வன் – உலகை வெல்லும் இளைய தமிழகம்” என்ற திட்டத்தையும் தொடங்கி வைத்தார். பிறகி நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மாணவர்கள், இளைஞர்களை முதல்வனாக மாற்றுவதே நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம் என கூறினார்
மேலும், தனது கனவு திட்டமான திறன் மேம்பாட்டு திட்டத்தை துவக்கி வைப்பது வாழ்வின் பொன்னாள் கல்வி, ஆராய்ச்சி, சிந்தனை செயலில் திறமையானவர்களாக மாணவர்கள் இளைஞர்களை மாற்றவே திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினர்.
நான் முதல்வன் என்பதை மாணவர்கள், இளைஞர்கள் உரக்கச் சொல்லும் போது உங்களுக்குள் நம்பிக்கை பிறக்கும். நமக்கு எங்கு வேலை கிடைக்க போகிறது என மனதிற்குள் இருக்கும் தடையை அகற்றும் நோக்கில் நான் முதல்வர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மொழித் திறமையை மேம்படுத்தவும் இத்திட்டத்தின் கீழ் பயிற்சிகள் வழங்கப்படும். இன்று முதல் நீங்கள் புதிய மனிதர்களாக மாறபோகிறீர்கள் எனக் கூறினார்.