அண்ணனின் காதலியை கல்யாணம் செய்த தம்பி - தொடர்ந்த உல்லாசத்தால் ஆத்திரம்!
மனைவியுடன் தகாத உறவில் இருந்த அண்ணனை தம்பி கொலை செய்ய முயன்றுள்ளார்.
தகாத உறவு
ஏற்காடு கொம்மக்காடு பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வினோத். இவரது தம்பி விவேக். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வெண்ணிலா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். ஆனால் வெண்ணிலா காதலித்தது வினோத்தை தான்.
குடும்பத்தாரின் கட்டாயத்தால் விவேக்கை திருமணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வெண்ணிலா திருமணத்திற்கு பின்பும் காதலன் வினோத் உடன் பழகி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த விவேக் மனைவியை கண்டித்துள்ளார்.
ஆத்திரத்தில் கொடுமை
ஆனால் அவர் கண்டுக்கொள்ளாமல் உறவை தொடர்ந்துள்ளார். இந்நிலையில், வினோத் காட்டெருமை முட்டி தலையில் காயம் ஏற்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை செய்ததில்,
மனைவியுடன் தகாத உறவு தொடர்பாக விவேக் வினோத்திடம் தகராறு செய்துள்ளார். அப்போது நடந்த வாக்குவாதத்தின்போது, விவேக் கல்லால் தலையில் தாக்கியதில், படுகாயமடைந்த வினோத் சுயநினைவை இழந்துள்ளார்.
தப்புவதற்காக, காட்டெருமை முட்டியதாக நாடகமாடியது தெரியவந்தது. அதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விவேக்கை கைது செய்துள்ளனர்.