சினிமா பட பாணியில் வீட்டிற்குள் புகுந்து இளம் பெண்ணை கடத்திய கும்பல் - மடக்கி பிடித்த போலீஸ்..!

Tamil nadu Tamil Nadu Police
By Thahir Aug 03, 2022 06:28 AM GMT
Report

மயிலாடுதுறையில் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை கொடூர ஆயுதங்களுடன் வலுக்கட்டாயமாக இளம் பெண்ணை கடத்திய சென்ற 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

இளம் பெண்ணுக்கு தொந்தரவு

தஞ்சை, ஆடுதுறை கஞ்சமேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் விக்னேஸ்வரன். இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மயிலம்மன் நகரில் உள்ள தனது பாட்டி பிரேமா வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

அப்போது அதே பகுதியில் வசித்து வந்த பட்டதாரி இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். விக்னேஷ்வரினின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடன் பழகுவதை அப்பெண் நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து விக்ரேஸ்வரன் அந்த பெண்ணை பின்தொடர்ந்துள்ளான்.மேலும் அப்பெண்ணை காதலிப்பதாக கூறியும் பெண் வீட்டுக் சென்று தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பம் தொடர்பாக பெண் வீட்டார் காவல்நிலையத்தில் இரண்டு முறை புகார் அளித்துள்ளனர்.இதனார் இருதரப்பினரையும் அழைத்து பேசிய போலீசார் விக்னேஷ்வரனிடம் இனி அந்த பெண்ணை பின் தொடர்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும், தொந்தரவு செய்யக்கூடாது என அறிவுரை வழங்கி எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் கடந்த ஜுலை 12-ம் தேதி அப்பெண்ணை கடத்த முயற்சித்துள்ளார்.அப்போது அவரிடம் இருந்து தப்பித்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வீட்டிற்குள் புகுந்து இளம் பெண் கடத்தல் 

இதனால் வீடு புகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு ஸ்கார்பியோ கார் மற்றும் பைக்கில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் 15-க்கும் மேற்பட்டோர் அப்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து வலுக்கட்டாயமாக துாக்கிச் சென்றுள்ளனர்.

சினிமா பட பாணியில் வீட்டிற்குள் புகுந்து இளம் பெண்ணை கடத்திய கும்பல் - மடக்கி பிடித்த போலீஸ்..! | Young Women Kidnap Police Action

இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் கடத்திச் சென்ற கும்பலை தேடியது. மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

சினிமா பட பாணியில் மடக்கி பிடித்த போலீஸ் 

பின்னர் சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் மற்ற மாவட்ட காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.பின்னர் இளம் பெண்ணை கடத்திச் சென்றவர்களை விக்கிரவாண்டி அருகே போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

இளம் பெண்ணை மீட்ட போலீசார் கடத்திச் சென்ற விக்னேஸ்வரன் மற்றும் அவனது கூட்டாளிகளான சுபாஷ் சந்திர போஸ், விழுப்புரத்தைச் சேர்ந்த செல்வக்குமார் உள்ளிட்ட 3 பேரையும் விக்கிரவாண்டி போலீசார் கைது செய்தனர்.

இளம் பெண்ணை கடத்திச் சென்றவர்களை உடனடியாக சினிமா பட பாணியில் மின்னல் வேகத்தில் செயல்பட்டு போலீசார் இளம் பெண்ணை மீட்டு கடத்தல் கும்பலை கைது செய்தனர்.