இவர்களையே அதிகம் பாதிக்கும் எச்.ஐ.வி - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

HIV Symptoms
By Sumathi Dec 02, 2025 12:47 PM GMT
Report

இளம் பெண்களை எச்.ஐ.வி அதிகம் பாதிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

எச்.ஐ.வி 

Women at greater risk of HIV infection என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், 2023ம் ஆண்டில், 15–24 வயதுடைய

இவர்களையே அதிகம் பாதிக்கும் எச்.ஐ.வி - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! | Young Women Are Much More Vulnerable To Hiv

1.9 மில்லியன் இளம் பருவப் பெண்கள் HIV உடன் வாழ்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் ஏற்பட்ட பாதிப்புகளில் இது ஒட்டுமொத்தமாக, 44%. 2025ம் ஆண்டில் இதன் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

ஒரு மாதத்துக்கு பீர் இலவசம்; இதை செய்தால் போதும் - சலூன் அறிவிப்பு

ஒரு மாதத்துக்கு பீர் இலவசம்; இதை செய்தால் போதும் - சலூன் அறிவிப்பு

என்ன காரணம்?

உடலுறவின்போது, ஆண்களை விட பெண்களின் பிறப்புறுப்புப் பாதையில் உள்ள சளி சவ்வு (Mucosa) எச்.ஐ.வி வைரஸை உள்வாங்க அதிக வாய்ப்புள்ளது. யோனிப் பாதையின் உட்பரப்பு ஆணுறுப்பின் பரப்பளவை விடப் பெரியதாக இருப்பதால், வைரஸ் தொற்றின் அபாயமும் அதிகமாகிறது.

HIV

ஏற்கனவே வேறு ஏதேனும் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் (STIs), அது எச்.ஐ.வி தொற்றுக்கான அபாயத்தை பல மடங்கு அதிகரிக்கிறது. எச்.ஐ.வி பரவும் வழிகள், தடுப்பு முறைகள் மற்றும் பாதுகாப்பான பாலியல் பழக்கவழக்கங்கள் குறித்து போதிய கல்வி மற்றும் விழிப்புணர்வு இல்லாதது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது.

இந்த அபாயத்தைக் குறைக்க, சுகாதாரக் கல்வி, சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றை உறுதி செய்வது அவசியம்.