காதலிப்பதாக கூறி பணம் பறித்தார் விக்ரமன்? - திருமாவுக்கு பரபரப்பு கடிதம் எழுதிய இளம்பெண்
காதலிப்பதாக கூறி ஏமாற்றி பணம் பறித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் மீது இளம்பெண் வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார்.
விக்ரமன் மீது புகார்
ஊடகவியலாளராக இருந்து பின்னர் விடுதலை சிறுத்தை கட்சியில் இணைந்த விக்ரமன் அங்கு இணை செய்தி தொடர்பாளராக உள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தையும்பிடித்தார். விக்ரமனின் பேச்சுக்கள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
இந்தநிலையில் விக்ரமன் மீது புகார் தெரிவித்து இளம்பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திருமாவுக்கு கடிதம்
அதில், மதிப்பிற்குரிய தலைவர் திரு தொல் திருமாவளவன் அவர்களுக்கு, என் பெயர் கிருபா முனுசாமி. உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வந்த நான் கடந்த 2020- ஆம் ஆண்டு ஒன்றிய அரசு சமூக நீதி அமைச்சகத்தின் National Overseas Scholarship-இன் மூலம் இலண்டனில் சட்டத் துறையில் முனைவர் பட்டப்படிப்பில் ஆராய்ச்சி செய்து வருகிறேன். நான் ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து நீதிமன்றங்களிலும் பொதுத்தளங்களிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன் என்பது தாங்கள் உட்பட என்பது பலரும் அறிந்ததே! தங்கள் கட்சியின் இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன்

அரசியல் நிகழ்ச்சிகளின் மூலமாக என்னுடன் நட்பாய் இருந்து நான் இலண்டனுக்கு சென்றபிறகு என்னை காதலிப்பதாக கூறினார். அவருக்கும் முற்போக்கு அரசியலில் பிடிப்பிருந்தது போல தோன்றியதால் நான் சம்மதித்தேன். நாங்கள் பழகி வந்த இந்த மூன்று ஆண்டுக்காலத்தில் என்னை பலமுறை வேசி என்றும் பிற ஆபாச வார்த்தைகளாலும் அவமானப்படுத்தியிருக்கார். ஒரு தலித்தாக இருப்பதினாலேயே எனக்கு அரசியல் ஆதாயம் கிடைப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
ஒரு கணவன் மனைவியைப் போல குடும்பம் நடத்துவதாக என்னை உணர வைத்து பணம் செலவு செய்ய வைத்தார். நான் விசிகவில் உள்ள தலித் ஆண்களை வைத்து அவருடைய தங்கையையும், 12 தாயையும் வன்புணர்வு செய்து விடுவேன் என்று குற்றம் சாட்டினார்.

கடந்த மூன்று ஆண்டுகளின் என்னை பலவிதமான குற்றவுணர்ச்சிகளுக்கு ஆளாக்கி ஜாதிய ஒடுக்குமுறையை குறித்தோ, ஒரு தனி மனிதராக என்னுடைய சுய மரியாதையை குறித்தோ பேசுவதே தவறு என்ற உணர்வு வரும் நிலைக்கு என்னை தள்ளினார்.
இவருடைய உளவியல் ரீதியான ஒடுக்குமுறையினால் தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணத்திலேயே என்னை வைத்திருந்தார் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு மனநல நிபுணரிடன் சிகிச்சைப் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.
நடவடிக்கை வேண்டும்
இதுவரையிலும் 12 இலட்சத்திற்கு மேல் பணம் பறித்து, உளவியல் ரீதியாக என்னை சிதைத்து தற்கொலை செய்துக்கொள்ள தூண்டிய விக்ரமன் மீது கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவை அனைத்திற்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது.
தனிப்பட்ட முறையில் இத்தகைய அருவறுப்பான செயல்களை நிகழ்த்தும் விக்ரமன் மீது தாங்கள் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்காவிடில் அது தலித் மக்களின் பாதுகாப்பிற்காக நிற்கும் கட்சியின் அடிப்படையையே கேள்விக்குறியாக்கி விடும் என அந்த கடிதத்தில் கிருபா முனுசாமி தெரிவித்துள்ளார்.