தகாத உறவில் பிறந்த குழந்தை - ஏரியில் வீசி கொலை செய்த கொடூர தாய்!

Chennai Crime
By Sumathi Jul 04, 2023 01:01 PM GMT
Report

கணவருக்கு தெரியாமல் தகாத உறவில் பிறந்த பச்சிளம் சிசுவை இளம்பெண் ஒருவர் ஏரியில் வீசி கொலை செய்துள்ளார்.

தகாத உறவு

சென்னை, வேளச்சேரியில் உள்ள ஏரிப் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா(26). இவருக்கு ஏற்கனவே திருணமாகி கார்த்திக் என்ற கணவரும் 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சங்கீதாவிற்கு கள்ளக்காதல் ஏற்பட்டு கர்ப்பம் அடைந்து அதை கலைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தகாத உறவில் பிறந்த குழந்தை - ஏரியில் வீசி கொலை செய்த கொடூர தாய்! | Young Woman Threw The Baby Into The Lake

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் வயிற்றில் குழந்தை இருப்பதை அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு தெரியாமல் பார்த்தது கொண்டார். கணவர் கேட்டபோது சாப்பிட்டு தூங்குவதனால் வயிறு பெரியதாகி உள்ளது என்று கூறிவந்துள்ளார் இந்நிலையில் கணவர் இல்லாத நேரத்தில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது. அதனை அருகில் உள்ள ஏரியில் வீசியுள்ளார். அதில் மூழ்கி குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது.

தண்ணீரில் மிதந்த உடல்

இதனை கண்ட ஊர் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து வேளச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருதத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீசார் விசாரணை

தொடர்ந்து, இதுகுறித்து விசாரிக்கையில் தகாத உறவில் பிறந்ததால் குழந்தையை பெற்ற பின் ஏரியில் வீசி கொலை செய்ததாக தெரியவந்தது. அதனையடுத்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.