இளம் பெண் பாலியல் வன்கொடுமை சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி கிடுக்குப்பிடி விசாரணை..!
விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேரும் என 8 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை மாலை இந்த வழக்கு விசாரணை சம்பந்தமான ஆவணங்களை விருதுநகர் டி.எஸ்.பி அர்ச்சனா சிபிசிஐடி விசாரணை அதிகாரி வினோதினியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் 22 வயது இளம் பெண் பாலியல் செய்யப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பிக்கள் சரவணன் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரியான வினோதினி ஆகியோரிடம் சிபிசிஐடி எஸ்பி முத்தரசி ஆலோசனை நடத்தினார்.
முதல் கட்டமாக பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி மற்றும் இந்த வழக்கில் விசாரணை அதிகாரியான வினோதினி ஆகிய இருவரும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரையும், ராமநாதபுரத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் 4 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.