கரும்புக் கொல்லையில் அரை நிர்வாணமாக இளம் பெண் சடலம் ...கொலையா....? தற்கொலையா.... ? காவல்துறை விசாரணை

murder youngwoman
By Irumporai May 15, 2021 05:05 PM GMT
Report

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வண்ணான்குடிகாடு கிராமம் மேற்கு தெருவைச் சார்ந்த கட்டையன் என்கிற ரவிச்சந்திரன் மனைவி சின்னப்பொண்ணு.

இவர்  அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவருடைய கரும்புக் கொல்லையில் அரை நிர்வாணத்துடன் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசிய நிலையில் கிடந்தார் .

இதனை கண்ட அப்பகுதி மக்கள் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர்,.

தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழப்புரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கரும்புக் கொல்லையில் அரை நிர்வாணமாக  இளம் பெண் சடலம் ...கொலையா....? தற்கொலையா.... ? காவல்துறை விசாரணை | Young Woman Killer Murder Suicide

மேலும் இந்த சம்பவம்  கொலையா தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.