அம்மா இதோ வந்திடுவேன்..!12 கிலோ மீட்டர் காரில் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட இளம் பெண்
டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடிய 20 வயது இளம்பெண் ஒருவர் பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்து விடுவேன் என்று கூறிய நிலையிலும் அடுத்த சில நிமிடங்களில் கார் மீது மோதி 12 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
12 கி.மீ காரில் இழுத்துச் செல்லப்பட்ட இளம்பெண்
டெல்லியை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் தனது ஸ்கூட்டியில் புத்தாண்டு கொண்டாட சென்றிருந்த நிலையில் புத்தாண்டு கொண்டாடிவிட்டு அவர் தனது அம்மாவிடம் செல்போனில் இன்னும் பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்று பேசியுள்ளார்.
இந்த நிலையில் அவர் தனது ஸ்கூட்டியில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தபோது கார் ஒன்று ஸ்கூட்டி மீது மோதியதால் அந்த ஸ்கூட்டியோடு அவர் 12 கிலோமீட்டர் தூரம் இழுத்து சென்றதாக தெரிகிறது.
காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அதிகாலை 3:24 மணிக்கு கார் ஒன்று ஸ்கூட்டியோடு ஒரு பெண்ணை இழுத்துச் செல்வது செல்லும் தகவல் வந்தது.
இதனையடுத்து உடனடியாக காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்த்த போது இளம் பெண்ணின் சடலம் கிடைத்தது.
5 பேர் கைது
அந்த பெண்ணின் உடல் முழுவதும் ஆடைகள் கிழிக்கப்பட்டு இருந்ததாகவும் அந்த பெண் கண்டுபிடிக்கப்பட்டபோது நிர்வாணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் போலீசார் இதனை மறுத்துள்ளனர்.
கார் ஸ்கூட்டியை இழுத்து சென்றதே காரில் உள்ளவர்களுக்கு தெரியாது என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர், இருப்பினும் காரில் உள்ள ஐந்து பேரும் மது அருந்தி இருந்ததாகவும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் தான் இந்த விபத்தில் இறந்ததாகவும் ஐந்து பேரையும் கைது செய்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் தற்செயலாக நடந்த ஒரு விபத்தை பாலியல் வன்கொடுமை சம்பவம் போல ஒரு சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்றும் அவை தவறானவை என்றும் அத்தகைய பதிவை பகிர்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இறந்த பெண்ணின் மாமா பிரேம் சிங் என்பவர் கூறிய போது, ‘தனது அக்காவின் மகள் அஞ்சலி இறந்துவிட்டதாக எங்களுக்கு காலை 7 மணிக்கு தகவல் வந்தது என்றும் என் சகோதரியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றும் விபத்து நடந்த இடத்தை அவருக்கு காட்டவில்லை என்றும் காரின் பக்கவாட்டில் ரத்தம் இருந்ததை நாங்கள் பார்த்தோம் என்றும் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நிர்பயா வழக்கு போன்றது என்றும் எங்களுக்கு நீதி வேண்டும் என்றும் அவர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.