தன் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்! கதறிய குடும்பத்தினர்

Chennai
By Fathima Aug 31, 2026 03:50 AM GMT
Report

தமிழகத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தன்உயிரை மாய்த்துக்கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெகநாதன், இவரது மகள் புவனேஸ்வரி(வயது 27), தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 2024ம் ஆண்டு இவருக்கும் செங்கல்பட்டை சேர்ந்த ஜானகிராமன் என்பவருக்கும் திருமணம் நடந்தது, இவர்களுக்கு 1 வயதில் ஆண்குழந்தையும் உள்ளது.

திருமணத்தின் போது பெண்ணுக்கு 50 பவுன், மாப்பிள்ளைக்கு 20 பவுன், 15 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

தன் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்! கதறிய குடும்பத்தினர் | Young Woman Dies Chennai Dowry Harassment

ஆனாலும் கூடுதல் வரதட்சணை கேட்டு புவனேஸ்வரியை ஜானகிராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தையின் முதல் பிறந்தநாளின் போது குழந்தைக்கு 1.25 பவுன் தங்கசங்கிலியை பரிசாக அளித்துள்ளனர், இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 20ம் தேதி தந்தை வீட்டுக்கு வந்துள்ளார் புவனேஸ்வரி, அங்கேயே இரு வரவேண்டாம் என போனில் ஜானகிராமன் பேசியதாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான புவனேஸ்வரி தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

இதனைதொடர்ந்து போலிசில் புகார் அளித்த புவனேஸ்வரியின் தந்தை, ஜானகிராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

இதனைதொடர்ந்து வழக்கின் விசாரணை கிண்டி ஆர்டிஓ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது