சென்னையில் விபத்து: இளம்பெண் சம்பவ இடத்திலேயே மரணம்
சென்னை குரோம்பேட்டையில் இன்று நடந்த விபத்தில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தாம்பரத்திலிருந்து வேளச்சேரி நோக்கி டாரஸ் லாரி நேற்றிரவு சென்று கொண்டிருந்தது.
குரோம்பேட்டை அருகே வந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண்கள் இருவர் பிரதான சாலையை கடக்க முயன்றதாக தெரிகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக டாரஸ் லாரியின் அருகே சென்ற நிலையில் விபத்தில் சிக்கினர்.
பெண் ஒருவர் லாரியில் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர், மற்றொருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற குரோம்பேட்டை போலிசார் உயிரிழந்த பெண்ணை மீட்டு தாம்பரம் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
விசாரணையில் உயிரிழந்தவர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஜமுனா(வயது 23) என்பதும், மற்றொருவர் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீஜா(வயது 22) என்பதும் தெரியவந்துள்ளது.