2 கணவன்களை பிரிந்து இன்ஸ்டாகிராம் கள்ளக் காதலனுடன் ஓடிய இளம்பெண் - கணவன் வைத்த ட்விஸ்ட்!

Tamil nadu Chennai Instagram Erode
By Jiyath Sep 03, 2023 10:21 AM GMT
Report

2வது கணவரையும் பிரிந்து இன்ஸ்டாகிராம் கள்ளக் காதலனை சந்திக்க சென்னை வந்த இளம்பெண்.

இன்ஸ்டாகிராம் காதலன்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரை சேர்ந்தவர் மதுபாலா (21). கடந்த 2021ம் ஆண்டு இவருக்கும் ஈரோட்டை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2022ம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

2 கணவன்களை பிரிந்து இன்ஸ்டாகிராம் கள்ளக் காதலனுடன் ஓடிய இளம்பெண் - கணவன் வைத்த ட்விஸ்ட்! | Young Woman Came To Chennai Instagram Boyfriend

இதற்கிடையில் மதுபாலாவுக்கு சென்னையில் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வரும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தினேஷ் குமார் (23) என்பவருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு அது காதலாக மாற, இந்த விஷயம் குறித்து அறிந்த மதுபாலாவின் பெற்றோர் அவசரமாக மாப்பிள்ளை பார்த்து, கேரளாவை சேர்ந்த மகேஷ் (32) என்பவருடன் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணமான 2 மாதங்களில் 2வது கணவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மாதம் மகேஷுக்கு தெரியாமல் இன்ஸ்டாகிராம் காதலன் தினேஷ்குமாரை தேடி சென்னை வந்துள்ளார் மதுபாலா. கடந்த 10 நாட்களாக இருவரும் சென்னையில் ஜாலியாக ஊர் சுற்றியுள்ளனர்.

போலீசார் விசாரணை

இந்நிலையில் தனது இரண்டாவது கணவர் மேகேஷுக்கு போன் செய்து 'என்னுடைய நண்பரை பார்க்க சென்னை வந்துள்ளதாக" கூறியுள்ளார். அதற்கு மகேஷ் "உன்னை காணவில்லை என்று கேரள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்" என்று கூறி மதுபாலாவை திட்டியதாக கூறப்படுகிறது.

2 கணவன்களை பிரிந்து இன்ஸ்டாகிராம் கள்ளக் காதலனுடன் ஓடிய இளம்பெண் - கணவன் வைத்த ட்விஸ்ட்! | Young Woman Came To Chennai Instagram Boyfriend

இதனால் அதிர்ச்சியடைந்த மதுபாலா இன்ஸ்டாகிராம் காதலன் தினேஷ்குமாருடன் சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். தங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் 'முதல் கணவன் கார்த்திக் என்னை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்றும், அவரின் தந்தை என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

நிலவில் தரையிறங்கும் முன் நாமக்கல் கிராமங்களில் தரையிறங்கிய சந்திரயான் 3 - எப்படி தெரியுமா?

நிலவில் தரையிறங்கும் முன் நாமக்கல் கிராமங்களில் தரையிறங்கிய சந்திரயான் 3 - எப்படி தெரியுமா?

இதனால் அவரை விட்டு பிரிந்தேன். 2வது கணவர் மகேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமை, அவரும் என்னை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை. இதனால் அவரை விட்டு பிரிந்தேன். மேலும் நான் இன்ஸ்டாகிராம் காதலன் தினேஷ்குமாருடன் வாழ விரும்புகிறேன் என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மதுபாலா காணாமல் போனதாக கேரளா மாநில காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதால், அவர் சென்னையில் தங்கியுள்ளதாக வேளச்சேரி போலீசார், கேரள போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். கேரள போலீசாரிடம் இருந்து உரிய பதில் வந்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.