இளம்பெண் தலையில் அடித்து கொடூர கொலை - கணவன் ஷாக் வாக்குமூலம்
இளம்பெண் தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம்
திருப்பூர், மொண்டிக்காட்டு தோட்டம் பகுதியில் பூங்கொடி என்ற இளம்பெண் சடலமாக கிடப்பதாக குண்டடம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

தொடர் விசாரணையில், பூங்கொடி உடலில் பலத்த வெட்டு காயங்கள் இருப்பது தெரியவந்தது. அப்போதுதான் கொக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அங்கமுத்து என்பவரின் மனைவிதான் பூங்கொடி. இவர்களுக்கு பெமினேஷன், நித்யா என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஷாக் வாக்குமூலம்
உயிரிழந்த பூங்கொடி 16 வயதில் பெற்றோர்களை மீறி அங்கமுத்துவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். கடந்த சில மாதங்களாக, கணவன் - மனைவி இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரச்சினை நீடித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதனால் சமையல் வேலை செய்து வரும் அங்கமுத்து அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவி பூங்கொடியைத் தாக்கி துன்புறுத்தி வந்துள்ளார். இதற்கிடையில், கை கால், முகம் உள்ளிட்ட இடங்களில் வெட்டுபட்ட நிலையில் முகம்
சிதைந்து பூங்கொடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து குடும்ப தகராறில் மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்ததாக அங்கமுத்து ஒப்புக்கொண்டார். தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.