‘போடு ஆட்டம் போடு ..நம்ம கேட்க எவனும் இல்ல’ : ஜாலியாக நடனம் ஆடும் இளம் தாலிபான்கள் - வைரலாகும் வீடியோ
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அரசு கடும் விதிமுறைகளை அமல்படுத்தி வரும் நிலையில் இளம் தாலிபான்கள் நடனம் ஆடும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அங்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு கொடுமையான பல சட்டங்களை விதித்து மக்களுக்கு இன்னல்களை உண்டாக்கி வருகின்றனர்.
இதனிடையே மாலை நேரத்தில் அர்கந்தாப் நதிக்கரையில் படமாக்கப்பட்டுள்ள வீடியோ ஒன்றில் தேசபக்திப் பாடல் ஒன்றுக்கு 7 இளம் தாலிபான்கள் இணைந்து நடனம் ஆடு்கின்றனர். இதனை பலரும் ஆச்சரியத்துடன் பார்வையிடுகின்றனர். அதற்கு காரணம் 1996 முதல் 2001 வரையிலான தாலிபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் இசை மற்றும் நடனம் தடை செய்யப்பட்டிருந்தது.
தற்போது தேசபக்தி பாடல்களையாவது கேட்டு அதற்கு நடனம் ஆடும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்களே என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.