இந்திய அணியில் மீண்டுமொரு வாய்ப்பு கிடைக்குமா? கவலையுடன் காத்திருக்கும் இளம்வீரர்!
இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டெஸ்ட் தர வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நியூசிலாந்து அணியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டியில் இங்கிலாந்தில் சவுத்தாம்படனில் வருகிற 18-ம் தேதி தொடங்குகிறது.
இந்திய அணியில் சில காலம் சிறப்பாக செயல்பட்டு வந்த குல்தீப் யாதவ் தனக்கு மீண்டு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அஸ்வின் - ஜடேஜா சுழற்பந்து ஜோடிக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சஹல் – குல்தீப் இந்திய அணியில் இடம்பெற்று வந்தனர்.. ஆனால், அதற்குப் பிறகு அணியில் இடம்பிடிக்க திணறிவருகின்றனர்.
அதே சமயம், ஜடேஜா மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியிள்ளார். அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சிறப்பாக ஆடிவருவதால் லிமிடெட் ஓவர் போட்டிகளில் இவரை எடுத்துவர பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அணியில் இடம் கிடைக்காத சூழலில் குல்தீப் யாதவ் தன்னுடைய கவலையை சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முடிவுற்றவுடன் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணியுடனான தொடரில் இடம் பெறவில்லை. இந்த செய்தி எனக்கு மிகவும் வருத்தத்தை தந்துள்ளது. எனது முழு திறன் வெளிப்படுத்த நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே என்னை நிரூபித்து காட்ட முடியும்.
இங்கிலாந்தில் தொடரில் இடம்பெறவில்லை என்றாலும், இலங்கை அணியுடனான தொடரில் இடம் கிடைத்தால் நிச்சயம் நிரூபித்து காட்டுவேன். அதற்காக காத்திருக்கிறேன். தற்போது நல்ல பார்மில் இருப்பதாக உணர்கிறேன். அதனை நிரூபிப்பேன்.” என்றுள்ளார்.
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil