முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் கருத்தடை சாதனம் சப்ளை: அசாம் முதல்வரால் பேச்சால் சர்ச்சை
முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கருத்தடை சாதனம் விநியோகம் செய்ய மக்கள் தொகை ராணுவம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா ஷர்மா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் மக்கள் தொகை குறைப்பு தொடர்பாக சட்ட முன்வரைவு ஒன்றை கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த அசாம் மாநிலத்தில் பாப்புலேஷன் ஆர்மி என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
இதன்படி 1000 பேர் கொண்ட குழு முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அவர்கள் கருத்தடை சாதனங்களை மக்களிடையே விநியோகம் செய்து மக்கள் தொகை அதிகரிப்பு கூடாது என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்ய உள்ளது. இது தொடர்பாக சட்டசபையிலேயே அறிவிப்பை முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா ஷர்மா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அப்போது குழந்தை பிறப்பை கட்டுப்படுத்தியதன் காரணமாக, அசாமில் இந்துக்களின் வாழ்க்கை முறை மேம்பட்டுள்ளது என்றும், அதிக மக்கள் தொகை காரணமாக மேற்கு மற்றும் மத்திய அசாம் மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் 'அப்பர்' அசாம் மக்களுக்கு தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே இந்த விழிப்புணர்வு அரசின் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.